கிளியே! – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

கிளி

கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை

பையன் – கிளியே, கிளியே, உன்னுடன்
கிளம்பி வரவா நானுமே?

கிளி – இறக்கை உனக்கு இல்லையே!
எப்ப டித்தான் பறப்பதோ?

பையன் – இறக்கை நீதான் கொண்டுவா.
இன்றே சேர்ந்து பறக்கலாம்.கிளி – பழங்கள் தாமே தின்னலாம்.
பட்ச ணங்கள் இல்லையே!

பையன் – பட்ச ணங்கள் வாங்கவே
பணமும் கொண்டு வருவேனே.கிளி – பணத்தை எந்த இடத்திலே
பாது காத்து வைப்பதோ?

பையன் – பணத்தைச் சிறகி னுள்ளேயே
பாது காத்து வைப்பேனே.

கிளி – பறக்கும் போது, ஐயையோ,
பணம் விழுந்து போகுமே!Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.