வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை
வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழாஇடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!
எட்டுத்திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே!
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!
பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!
அகண்டவெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!
அழகான கவிதை… பார் முழுதும் வீட்டிலே… பறவை கூட கூட்டிலே.. வரிகள் அருமை..
மின்னலொரு நாட்டியம். மேடை வான மண்டபம்.. மிகவும் அழகான உவமை..👏👏👏
சிறு வயதில் படித்த இந்த கவிதை இன்னும் நம் நினைவில் இருப்பதற்குக் காரணம்:
இந்தப் பாடலின் எளிமை, அழகு, மற்றும் குழந்தைகளே ராகத்தோடு பாடும் வண்ணம் எதுகை மோனையோடு, அமைந்த கவிதை நடை. கவிஞருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.