யாகாவார் ஆயினும் நாகாக்க – குறள்: 127

யாகாவார் ஆயினும் நாகாக்க

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. – குறள்: 127

– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்


கலைஞர் உரை

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்
காத்திட வேண்டும்.  இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்
துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.


ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.


மு. வரதராசனார் உரை

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.