கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் – குறள்: 496

Thiruvalluvar

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – குறள்: 496

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலத்தின்கண் ஓடும் வலிய சக்கரங்களுள்ள நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா ; கடலின்கண் ஓடும் மரக்கலங்களும் நிலத்தின்கண் ஓடமாட்டா.மு. வரதராசனார் உரை

வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.G.U. Pope’s Translation

The lofty car, with mighty wheel, sails not o’er watery main, The boast that skims the sea, runs not on earth’s hard plain.

 – Thirukkural: 496, Knowing the Place, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.