குணநலம் சான்றோர் நலனே – குறள்: 982

Thiruvalluvar

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
– குறள்: 982

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும்
அழகல்ல.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று.



மு. வரதராசனார் உரை

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.



G.U. Pope’s Translation

The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.

 – Thirukkural: 982, Perfectness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.