தீயவை தீய பயத்தலால் – குறள்: 202

தீயவை தீய பயத்தலால்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். – குறள்: 202

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தனக்கின்பம் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.



மு. வரதராசனார் உரை

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.



G.U. Pope’s Translation

Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

 – Thirukkural: 202, Dread of Evil Deed, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.