வலிஇல் நிலைமையான் வல்உருவம் – குறள்: 273

Thiruvalluvar

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

– குறள்: 273

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று
புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மனத்தை யடக்கும் வலிமையில்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக் கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல்; ஆவு கொல்லைக் காவலர் துரத்தா வண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

As if a steer should graze wrapped round with tiger’s skin, Is show of virtuous might when weakness lurks within.

 – Thirukkural: 273, Inconsistent Conduct, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.