தவம்மறைந்து அல்லவை செய்தல் – குறள்: 274

Thiruvalluvar

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்கலைஞர் உரை

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மனத்தை யடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல்; வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.மு. வரதராசனார் உரை

தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.G.U. Pope’s Translation

‘Tis as a fowler, silly birds to snare, in thicket lurks, When, clad in stern ascetic garb, one secret evil works.

 – Thirukkural: 274, Inconsistent Conduct, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.