உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032

உழுவார் உலகத்தார்க்கு ஆணி

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
– குறள்: 1032

– அதிகாரம்: உழவு, பால்: பொருள்கலைஞர் உரை

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உழவுத் தொழிலைச் செய்வார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்; அத்தொழிலைச் செய்யும் வலிமையின்றிப் பிற தொழில்களை மேற்கொள்வாரை யெல்லாம் தாங்குதலால்.மு. வரதராசனார் உரை

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.G.U. Pope’s Translation

The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

 – Thirukkural: 1032, Agriculture, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.