பிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras for UG/PG Students)
பிற கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology – IIT Madras) கல்வி உதவித்தொகையுடன் இரண்டு மாத கோடைக்காலத் திட்டத்தில் (Summer Fellowship Programme 2020 in IIT Madras) பணி புரிய ஓர் அரிய வாய்ப்பு!
சென்னை ஐ.ஐ.டி., உயர்தர ஆராய்ச்சியில் பிற கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் விதமாக, இரண்டு மாத காலத்திற்கு சிறிய கோடைக்காலத் திட்டங்கள் (Mini Summer Projects) செய்ய அனுமதிக்கிறது.
கல்வித்தகுதி
கல்வியில் பல சாதனைகள் புரிந்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கும் ஐ.ஐ.டி அல்லாத பிற கல்லூரிகளைச் சேர்ந்த, கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்தக் கோடைக்காலத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- 3rd year of B.E./B.Tech./B.Sc. (Engg)
(அல்லது)
- 3rd or 4th year of Integrated M.E./M.Tech. programme,
(அல்லது)
- 1st year of ME/M.Tech/M.Sc./M.A, MBA
கல்வி உதவித்தொகை
மாதம் தோறும் ரூ. 6000 என இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ. 12,000 வழங்கப்படும்.
திட்டத்தின் காலம் (Period of the Project)
மே-20-2020 முதல் ஜூலை-19-2020 வரை (மாணவர்களின் வசதிக்கேற்ப தேதியில் மாற்றம் ஏற்படலாம்.)
விண்ணப்பிக்க இறுதித் தேதி: 29-02-2020
மேலும் விவரங்களுக்கு சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) -இன் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தைச் சொடுக்கிப் பார்க்கவும்:
IIT Madras Summer Fellowship Programmes 2020
Be the first to comment