உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 600

ற்கு உள்ள வெறுக்கை

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.
குறள்: 600

– அதிகாரம்: ஊக்கமுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அவ்வூக்கமிகுதியில்லாதவர் மக்களாகார், மரங்களாவர்; மக்கள் வடிவிலிருப்பதே இம் மரங்களுக்குக் குலமரங்களொடு வேற்றுமையாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.



G.U. Pope’s Translation

Firmness of soul in man is real excellence;
Others are trees, their human form a mere pretence.

– Thirukkural: 600, Energy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.