மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020 – National Eligibility Cum Entrance Test (NEET (UG) – 2020)

NEET (UG) - 2020

மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020  National Eligibility Cum Entrance Test (NEET (UG) – 2020) for MBBS / BDS Courses

தேசிய தேர்வுக் குழு (National Testing Agency – NTA) நடத்தும் மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2020 (NEET (UG) – 2020) தேர்வுக்கான பதிவுகள் இணைய வழியே நடைபெறுகின்றன. நீட் (இளநிலை) – 2020 (NEET (UG) – 2020) என்பது பொது மருத்துவ (Medicine – MBBS) மற்றும் பல் மருத்துவ (Dental – BDS) இளநிலை பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக இந்திய அளவில் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு.

இந்தப் பகுதியில், நீட்-2020 நுழைவுத் தேர்வுக்கான விவரங்களையும், தேர்வுக்குப் படிக்க உதவும், சில இணையமுகவரிகளையும் பார்ப்போம்.

பனிரெண்டாம் வகுப்பு (10+2 / Higher Secondary Course – HSC / Senior Secondary Course – SSC) படி க்கும் அல்லது முடித்த மாணவர்கள், இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) ஆகிய பாடங்களை 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்து இருப்பின், அவர்கள் நீட் (இளநிலை) – 2020 (NEET (UG) – 2019) தேர்வு எழுதலாம்.

இத்தேர்வுக்கான பதிவுகள் இணைய வழியே 02-டிசம்பர்-2019 முதல் நடைபெற்று வருகின்றன. பதிவுகள் 06-ஜனவரி-2020 அன்று முடிவடைகின்றன.

AIIMS மற்றும் JIPMER ஆகிய மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி / நிறுவனங்களில் சேர்ந்து இளநிலைப் பொது மருத்துவம் (Medicine – MBBS) அல்லது பல் மருத்துவம் (Dental – BDS) படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வைத் தவறாமல் எழுத வேண்டும்.  நீட் (இளநிலை) – 2020 (NEET (UG) – 2020) தேர்வு 03-மே-2020 அன்று நடைபெற உள்ளது.

மேலும் நீட் (இளநிலை) – 2020 (NEET (UG) – 2020) தொடர்பான, கல்வித் தகுதி, வயது வரம்பு, இணையவழிப் பதிவு பற்றிய வழிமுறைகள், தேர்வுக்கான பாடத்திட்டம், முக்கிய தேதிகள், விண்ணப்பக் கட்டணம், விதிமுறைகள் போன்ற விவரங்களை அறிய, கீழ்க்கண்ட  இணைய முகவரிகளைப் பார்க்கவும்:

நீட் தேர்வுக்குப் படிக்கத் துணைபுரியும் சில இணைய இணைப்புகள்

  • தேசியத் தேர்வுக் குழு (NTA) நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, ஐ.ஐ.டி (IIT) பேராசியர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் நடத்தும் வீடியோ பாட வகுப்புகளை (VIDEO LECTURES) வெளியிட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.