பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் -குறள்: 187

Thiruvalluvar

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187

– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்கலைஞர் உரை

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.மு. வரதராசனார் உரை

மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.G.U. Pope’s Translation

With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.

 – Thirukkural: 187, Not Backbiting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.