ஒழுக்கத்து நீத்தார் பெருமை – குறள்: 21

Thiruvalluvar

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
– குறள்: 21

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்கலைஞர் உரை

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்
விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பனுவல் துணிவு – நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை – தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் – சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.மு. வரதராசனார் உரை

ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.G.U. Pope’s Translation

The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood.

 – Thirukkural: 21, The Greatness of Ascetics, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.