தினைத்துணை நன்றி செயினும் – குறள்: 104

தினைத்துணை நன்றி செயினும்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
– குறள்: 104

– அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்கலைஞர் உரை

ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.மு. வரதராசனார் உரை

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.G.U. Pope’s Translation

Each benefit to those of actions’ fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem.

 – Thirukkural: 104, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.