பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் – குறள்: 248

Thiruvalluvar

பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது. – குறள்: 248

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை
இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஏதேனும் ஒரு வகையிற் செல்வத்தை யிழந்தவர், முயற்சியால் மீண்டும் ஒருகால் அதைப் பெற்றுப் பொலிவடைவர்; ஆயின், அருட் பண்பை யிழந்தவரோ ஒரேயடியாய் அழிந்தவராவர்; பின்பு ஒருகாலும் ஆக்கம் பெறார்.மு. வரதராசனார் உரை

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.G.U. Pope’s Translation

Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose, ‘benevolence,’ lose all ; nothing can change their doom.

 – Thirukkural: 248, The Possession of Benevolence, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.