செயற்பாலது ஓரும் அறனே – குறள்: 40

Thiruvalluvar

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி. – குறள்: 40

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; செய்யாது விடத்தக்கது தீவினையே.



மு. வரதராசனார் உரை

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.



G.U. Pope’s Translation

‘Virtue’ sums the things that should be done;
‘Vice’ sums the things that man should shun.

 – Thirukkural: 40, Assention of the Strength of Virtues, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.