சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – குறள்: 597

Thiruvalluvar

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பா டுஊன்றும் களிறு. – குறள்: 597

– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருட்பால்கலைஞர் உரை

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.மு. வரதராசனார் உரை

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.G.U. Pope’s Translation

The men of lofty mind quail not in ruin’s fateful hour, The elephant retains his dignity mind arrow’s deadly shower.

 – Thirukkural: 597, Energy, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.