பழகிய செல்வமும் பண்பும் – குறள்: 937

Thiruvalluvar

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
குறள்: 937

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.கலைஞர் உரை

சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்;அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.மு. வரதராசனார் உரை

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.G.U. Pope’s Translation

Ancestral wealth and noble frame to ruin haste, If men in gambler’s halls their precious moments waste.

Thirukkural: 937, Gambling, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.