ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் – குறள்: 478

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும்

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை.
குறள்: 478

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கெடுதல் இல்லை . .



மு. வரதராசனார் உரை

பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.



G.U. Pope’s Translation

Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare.

 – Thirukkural: 478,The Knowledge of Power, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.