செறுநரைக் காணின் சுமக்க – குறள்: 488

Thiruvalluvar

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
– குறள்: 488

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்
கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசர் தம்மினும் வலிய பகைவரைக் காணநேர்ந்தால் அவருக்கு நற்காலம் உள்ள வரை அவருக்குத் தாழ்ந்து பணிக ; அவர்க்கு முடிவுக்காலம் வரின் தலைகீழாக விழுந்து மாய்வர் .



மு. வரதராசனார் உரை

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.



G.U. Pope’s Translation

If foes’ detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy, the head lies there.

 – Thirukkural: 488, Knowing the fitting time, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.