இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை – குறள்: 903

Thiruvalluvar

இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
குறள்: 903

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.



கலைஞர் உரை

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன் மனைவிக்குப் பணியும் ஆண்மையின்மை; எப்போதும் , அஃதில்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறப்பிக்கும்.



மு. வரதராசனார் உரை

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.



G.U. Pope’s Translation

Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.

Thirukkural: 903, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.