இலமென்று வெஃகுதல் செய்யார் – குறள்: 174

Thiruvalluvar

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
– குறள்: 174

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.



மு. வரதராசனார் உரை

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், `யாம் வறுமை அடைந்தோம்’ என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.



G.U. Pope’s Translation

Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other’s goods, e’en in the hour of sorest need.

 – Thirukkural: 174, Not Coveting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.