பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – குறள்: 246

Thiruvalluvar

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,
பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.மு. வரதராசனார் உரை

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.G.U. Pope’s Translation

Gain of true wealth oblivious they eschew,
Who ‘grace’ forsake, and graceless actions do.

 – Thirukkural: 246, The Possession of Benevolence, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.