அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை – குறள்: 247

Thiruvalluvar

அருள்இல்லார்க்கு அவ்உலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்உலகம் இல்லாகி யாங்கு. – குறள்: 247

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்கலைஞர் உரை

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.
அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருட் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருட் செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்ப மில்லை .மு. வரதராசனார் உரை

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.G.U. Pope’s Translation

As to impoverished men this present world is not; The ‘graceless’ in you world have neither part nor lot.

 – Thirukkural: 247, The Possession of Benevolence, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.