நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க – குறள்: 242

Thiruvalluvar

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்
தேரினும் அஃதே துணை. – குறள்: 242

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே
வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உத்திக்குப் பொருத்தமான நல்ல அளவைகளால் ஆராய்ந்து பார்த்து அருளைமேற் கொள்க; பல்வேறு சமயநெறிகளால் ஆராய்ந்தாலும் இறுதியில் அவ்வருளே துணையாக முடியும்.



மு. வரதராசனார் உரை

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.



G.U. Pope’s Translation

The law of ‘grace’ fufil, by methods good due trial made, Though many systems you explore, this is your only aid.

 – Thirukkural: 242 , The Possession of Benevolence, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.