பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை – குறள்: 148

Thiruvalluvar

பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.

– குறள்: 148

– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத
பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ ; நிரம்பிய ஒழுக்கமுமாம்.



மு. வரதராசனார் உரை

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.



G.U. Pope’s Translation

Manly excellence, that looks not on another’s wife, Is not virtue merely, ’tis full ‘propriety’ of life.

 – Thirukkural: 148, Not Coveting Another’s Wife, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.