ஒப்புரவினால் வரும் கேடுஎனின் – குறள்: 220

Thiruvalluvar

ஒப்புரவினால் வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

– குறள்: 220

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்கலைஞர் உரை

பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக்கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னைவிற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு வருமாயின்; அக்கேடு ஒருவன் தன்னை விற்றாகிலுங் கொள்ளத்தக்க தகுதியுடையதாம்.மு. வரதராசனார் உரை

ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.G.U. Pope’s Translation

Though by ‘beneficence’ the loss of all should come, ‘Twere meet man sold himself, and bought it with the sum.

 – Thirukkural: 220, The Knowledge of What is Befitting a Man’s Position, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.