மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் – குறள்: 857

Thiruvalluvar

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
– குறள்: 857

– அதிகாரம்: இகல், பால்: பொருள்கலைஞர் உரை

பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு
வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாறுபாட்டை விரும்புகின்ற தீய அறிவினையுடையார்; வெற்றியொடு பொருந்தும் அரசியலுண்மைகளை அறியமாட்டார்.மு. வரதராசனார் உரை

இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.G.U. Pope’s Translation

The very truth that greatness gives their eyes can never see,
Who only know to work men woe, fulfilled of enmity.

Thirukkural: 857, Hostility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.