ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேர் அறிவாளன் திரு. – குறள்: 215

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகிலுள்ள உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான் செல்வம்; ஊர்வாழ்நரின் குடிநீர்க்குளம் நிரம்பினாற் போன்றதே.



மு. வரதராசனார் உரை

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

The wealth of men who love the ‘fitting way,’ the truly wise, Is as when water fills the lake that village needs supplies.

 – Thirukkural: 215, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.