வினையான் வினைஆக்கிக் கோடல் – குறள்: 678

வினையான் வினைஆக்கிக் கோடல்

வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

– குறள்: 678

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு
செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு வினையைச் செய்யும் பொழுதே அதனால் வேறுமொரு வினையை முடித்துக் கொள்ளுதல்; மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையால் வேறுமொரு யானையைப் பிடித்துக் கட்டிய தொக்கும்.



மு. வரதராசனார் உரை

ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.



G.U. Pope’s Translation

By one thing done you reach a second work’s accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.

– Thirukkural: 678, Modes of Action, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.