ஈதல் இசைபட வாழ்தல் – குறள்: 231

Thiruvalluvar

ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
– குறள்: 231

– அதிகாரம்: புகழ், பால்: அறம்கலைஞர் உரை

கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை ஈக; அதனாற் புகழுண்டாக வாழ்க; அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.மு. வரதராசனார் உரை

வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.G.U. Pope’s Translation

See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.

 – Thirukkural: 231, Renown, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.