நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்பேதை வினைமேற் கொளின். – குறள்: 836 . – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடரமுடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்கொள்வர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யும் வகை [ மேலும் படிக்க …]
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்ஏதப்பாடு அஞ்சு பவர். – குறள்: 464 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]
அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர். – குறள்: 1009 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment