நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். – குறள்: 962 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புகழொடு [ மேலும் படிக்க …]
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. – குறள்: 101 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. [ மேலும் படிக்க …]
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணியது உடைத்து. – குறள்: 353 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment