பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் – குறள்: 44

Thiruvalluvar

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
– குறள்: 44

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்



கலைஞர் உரை

பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது இல்லறவாழ்க்கை ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.



மு. வரதராசனார் உரை

பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.



G.U. Pope’s Translation

Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.

 – Thirukkural: 44, Domestic Life, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.