அறிவுஇன்மை இன்மையுள் இன்மை – குறள்: 841

Thiruvalluvar

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு. – குறள்: 841

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற
பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் செல்வமின்மையை உயர்ந்தோர் வறுமையாகக் கருதார்.



மு. வரதராசனார் உரை

அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.



G.U. Pope’s Translation

Want of knowledge, ‘mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem.

Thirukkural: 841, Ignorance, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.