நகைவகையர் ஆகிய நட்பின் – குறள்: 817

Thiruvalluvar

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்துஅடுத்த கோடி உறும்.
– குறள்: 817

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால்
ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் அறிவடையும் வகையினராகாது சிரித்து மகிழும் வகையினராதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும்; பகைவரால் வருந்துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம்.



மு. வரதராசனார் உரை

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.



G.U. Pope’s Translation

From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that’s formed with laughters vain.

Thirukkural: 817, Evil Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.