மன்னர் விழைப விழையாமை – குறள்: 692

Thiruvalluvar

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.
– குறள்: 692

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்



கலைஞர் உரை

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்
விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான
ஆக்கத்தை அளிக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மால் அடுக்கப் பட்ட அரசர் தம் பதவிக்கேற்பச் சிறப்பாக விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதிருத்தல்; அவ்வரசர் வாயிலாகவே அமைச்சர் முதலியோரான தமக்கு நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.



மு. வரதராசனார் உரை

அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.



G.U. Pope’s Translation

To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies.

 – Thirukkural: 692, Conduct in Persence of the King, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.