உரைப்பார் உரைப்பவை எல்லாம் – குறள்: 232

உரைப்பார் உரைப்பவை எல்லாம்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். – குறள்: 232

– அதிகாரம்: புகழ், பால்: அறம்கலைஞர் உரை

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.மு. வரதராசனார் உரை

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.G.U. Pope’s Translation

The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

 – Thirukkural: 232, Renown, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.