அகலாது அணுகாது தீக்காய்வார் – குறள்: 691

Thiruvalluvar

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.
– குறள்: 691

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்கலைஞர் உரை

முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல
அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.மு. வரதராசனார் உரை

அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.G.U. Pope’s Translation

Who warm them at the five draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.

 – Thirukkural: 691, Conduct in Persence of the King, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.