இகலானாம் இன்னாத எல்லாம் – குறள்: 860

இகலானாம் இன்னாத எல்லாம்

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
– குறள்: 860

– அதிகாரம்: இகல், பால்: பொருள்



கலைஞர் உரை

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே தீயனவெல்லாம் உண்டாகும்; அதற்கு மறுதலையான நட்பினால் நல்ல நேர்பாடு (நீதி) என்னும் செல்வம் உண்டாகும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.



G.U. Pope’s Translation

From enmity do all affictive evils flow;
But friendliness doth wealth of kindly good bestow.

 – Thirukkural: 860, Hostility, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.