அகன்அமர்ந்து செய்யாள் உறையும் – குறள்: 84

Thiruvalluvar

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
– குறள்: 84

– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்



கலைஞர் உரை

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முமுக மலர்ந்து நல்ல விருந்தினரைப பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும்-திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.

திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல் பற்றி. வதிதல்-நிலையாகத் தங்குதல் நல் விருந்தினர்-அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர்.



மு. வரதராசனார் உரை

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.



G.U. Pope’s Translation

With smiling face he entertains each virtuous guest; ‘Fortune’with gladsome mind shall in his dwelling rest.

 – Thirukkural: 84, Cherishing Guests, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.