அறிவு உடையார் ஆவது அறிவார் – குறள்: 427

அறிவு உடையார் ஆவது அறிவார்


அறிவுஉடையார் ஆவது அறிவார் அறிவுஇலார்
அஃது அறிகல்லா தவர். – குறள்: 427

– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்  சிந்திக்க மாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர்; அறிவில்லாதவர் அதனை முன்னறியும் ஆற்றலில்லாதவர்.மு. வரதராசனார் உரை

அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.