குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

Thiruvalluvar

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
– குறள்: 549

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்
யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வருத்தாது பேணி , அவர் குற்றஞ் செய்யின் அதைத் தண்டனையால் நீக்குதல் ; அரசனின் குற்றமன்று , அவன் கடமையாம்.



மு. வரதராசனார் உரை

குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.



G.U. Pope’s Translation

Abroad to guard, at home to punish, brings
No just reproach; ’tis work assigned to kings.

 – Thirukkural: 549, The Right Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.