பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் – குறள்: 475

Thiruvalluvar

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
குறள்: 475

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும் ; அப்பொருளை வண்டிதாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின் .மு. வரதராசனார் உரை

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.G.U. Pope’s Translation

With peacock feathers light you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain.

 – Thirukkural: 475,The Knowledge of Power, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.