சூழாமல் தானே முடிவுஎய்தும் – குறள்: 1024

Thiruvalluvar

சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
– குறள்: 1024

– அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள்கலைஞர் உரை

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்
தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும்.மு. வரதராசனார் உரை

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.G.U. Pope’s Translation

Who labours for his race with unremitting pain,
Without a thought, spontaneously, his end will gain.

 – Thirukkural: 1024, The way of Maintaining the Family, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.