அரும்பயன் ஆயும் அறிவினார் – குறள்: 198

அரும்பயன் ஆயும் அறிவினார்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
– குறள்: 198

– அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம்கலைஞர் உரை

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,
பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.மு. வரதராசனார் உரை

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.G.U. Pope’s Translation

The wise, who weigh the worth of every utterance, Speak none but words of deep significance.

 – Thirukkural: 198, Not Speaking Profitless Words, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.