அழச்சொல்லி அல்லது இடித்து – குறள்: 795

Thiruvalluvar

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
– குறள்: 795

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை
வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நன்மையல்லாதது செய்தவிடத்துக் கண்டித்து மனம் வருந்துமாறு அறிவுரை கூறி; உலக நடையறிந்து அதன்படி நடப்பிக்கும் திறமை யுடையவரை; ஆராய்ந்து கண்டு; அவரொடு நட்புக் கொள்க.



மு. வரதராசனார் உரை

நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.



G.U. Pope’s Translation

Make them your chosen friends whose words repentance move,
With power prescription’s path to show, while evil they reprove.

 – Thirukkural: 795, Investigation formatting Friendships, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.