எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் – குறள்: 750

Thiruvalluvar

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
– குறள்: 750

– அதிகாரம்:அரண், பால்: பொருள்கலைஞர் உரை

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட
உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களெல்லா வற்றோடுங்கூடி எத்துணை மாட்சிமைப் பட்டதாயிருப்பினும்; போர்வினைச் சிறப்பில்லாதவரிடத்துப் பயன்படாததாம்.மு. வரதராசனார் உரை

எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.G.U. Pope’s Translation

Howe’er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.

 – Thirukkural: 750, The Fortification, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.