பொச்சாப்புக் கொல்லும் புகழை – குறள்: 532

Thiruvalluvar

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்புக்கொன் றாங்கு.
– குறள்: 532

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல
மறதி, புகழை அழித்து விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும்.



மு. வரதராசனார் உரை

நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.



G.U. Pope’s Translation

Perpetual poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!

 – Thirukkural: 532, Unforgetfulness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.